/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரோடு பணியை ஆய்வு செய்ய தயக்கம் மானாமதுரையில் சிதறிய ஜல்லிக்கற்கள் ரோடு பணியை ஆய்வு செய்ய தயக்கம் மானாமதுரையில் சிதறிய ஜல்லிக்கற்கள்
ரோடு பணியை ஆய்வு செய்ய தயக்கம் மானாமதுரையில் சிதறிய ஜல்லிக்கற்கள்
ரோடு பணியை ஆய்வு செய்ய தயக்கம் மானாமதுரையில் சிதறிய ஜல்லிக்கற்கள்
ரோடு பணியை ஆய்வு செய்ய தயக்கம் மானாமதுரையில் சிதறிய ஜல்லிக்கற்கள்
ADDED : ஜூன் 23, 2025 11:41 PM

மானாமதுரை,: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் தார் ரோடு பணியை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.39 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நகராட்சி பகுதிகள் உள்ள அனைத்து ரோடுகளையும் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணி நிறைவு பெற்ற பகுதிகளில் தார் ரோடு அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
பெமினா நகர், அன்பு நகர்,அண்ணாமலை நகர், ராம் நகர் ரயில்வே காலனி உள்ளிட்ட பகுதிகளில் தார் ரோடு போடப்படும் நிலையில் ரோடு அமைத்த 2 நாட்களிலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குழாய்கள் பதிக்கப்பட்ட தெருக்களில் தார் ரோடு போடப்பட்டு வருகிறது.ஒரு சில இடங்களில் தரமற்ற ரோடு போடப்பட்டுள்ளதாக மக்களிடமிருந்து புகார் வந்துஉள்ளது. ரோடு போடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் தரமாக ரோடு போட வேண்டுமென்று தெரிவித்துள்ளதாக கூறினர்.