/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் விற்பனைக்கு வந்த பச்சை நிற வாட்டர் ஆப்பிள் திருப்புவனத்தில் விற்பனைக்கு வந்த பச்சை நிற வாட்டர் ஆப்பிள்
திருப்புவனத்தில் விற்பனைக்கு வந்த பச்சை நிற வாட்டர் ஆப்பிள்
திருப்புவனத்தில் விற்பனைக்கு வந்த பச்சை நிற வாட்டர் ஆப்பிள்
திருப்புவனத்தில் விற்பனைக்கு வந்த பச்சை நிற வாட்டர் ஆப்பிள்
ADDED : செப் 04, 2025 04:23 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் மழை தொடங்க உள்ள நிலையில் பச்சை நிற வாட்டர் ஆப்பிள் விற்பனைக்கு வந்துள்ளது.
கோடை காலங்களில் பழங்களின் விற்பனை அதிகமாக இருக்கும்.வெயிலின் தாக்கத்தை தணிக்க பலரும் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள்.வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே விற்பனையாகும் வாட்டர் ஆப்பிள் தற்போது செப்டம்பரிலும் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமாக இளஞ்சிவப்பு நிறத்தில் புளிப்பும், இனிப்பும் சேர்ந்த சுவையாக வாட்டர் ஆப்பிள் இருக்கும். திருப்புவனத்தில் கிலோ 200 ரூபாய் என நேற்று விற்பனை செய்யப்பட்டது.
வியாபாரிகள் கூறுகையில்: மதுரை அலங்காநல்லூர் அருகே மூடுவார்பட்டியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மார்ச்சில் தொடங்கி ஆகஸ்ட் வரை விற்பனை செய்யப்படும், தற்போது செப்டம்பரில் விற்பனை தொடங்கியுள்ளது. பச்சை நிற வாட்டர் ஆப்பிள்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். திருப்புவனத்தில் தினசரி பத்து கிலோ வரை விற்பனையாகிறது என்றார்.