ADDED : மார் 21, 2025 06:41 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
பழைய மாணவர் பொறியாளர் கார்த்திக் மணிகண்டன் பட்டம் வழங்கினார். முதல்வர் தபசம் கரீம் வரவேற்றார். தாளாளர் ரூபன் அறிமுக உரையாற்றினார்.
பள்ளித் தலைவர் விக்டர், ஆசிரியைகள் யோகேஸ்வரி, கற்பகம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரசாந்த், கற்பகவள்ளி பங்கேற்றனர்.