/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சத்துணவு பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் : பி.இ., எம்.பில்., முடித்தோர் வருகையால்அதிர்ச்சி சத்துணவு பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் : பி.இ., எம்.பில்., முடித்தோர் வருகையால்அதிர்ச்சி
சத்துணவு பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் : பி.இ., எம்.பில்., முடித்தோர் வருகையால்அதிர்ச்சி
சத்துணவு பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் : பி.இ., எம்.பில்., முடித்தோர் வருகையால்அதிர்ச்சி
சத்துணவு பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் : பி.இ., எம்.பில்., முடித்தோர் வருகையால்அதிர்ச்சி

அதிகாரிகள் அதிர்ச்சி
அங்கன்வாடி, பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஒட்டு மொத்தமாக 5,298 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வை தகுதியாக கொண்டு தான் அங்கன்வாடி, சத்துணவு மைய பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. ஆனால் இந்த பணிக்கு பி.இ., மற்றும் எம்.பில்., முடித்த பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
தீவிர வசூல் நடப்பதாக புகார்
இந்நிலையில் சத்துணவு, அங்கன்வாடி சமையல் உதவியாளர் பணிக்கு மாவட்ட அளவில் புரோக்கர்கள், அரசியல் கட்சியினர் ரூ.3 முதல் 8 லட்சம் வரை வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இந்த பணிக்கென நடக்கும் வசூல் புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்து மாவட்ட நிர்வாகம் தகுதி அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.