Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/5 நாட்களுக்கு ஒரு முறை தான் தேவகோட்டையில் குப்பை அகற்றம்; நகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்

5 நாட்களுக்கு ஒரு முறை தான் தேவகோட்டையில் குப்பை அகற்றம்; நகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்

5 நாட்களுக்கு ஒரு முறை தான் தேவகோட்டையில் குப்பை அகற்றம்; நகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்

5 நாட்களுக்கு ஒரு முறை தான் தேவகோட்டையில் குப்பை அகற்றம்; நகராட்சி கவுன்சிலர்கள் குமுறல்

ADDED : ஜன 13, 2024 05:15 AM


Google News
தேவகோட்டை, : தேவகோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் (அ.தி.மு.க.) தலைமையில் துணை தலைவர் ரமேஷ் (அ.தி.மு.க.) பொறியாளர் மீராஅலி முன்னிலையில் நடந்தது.

கவுன்சிலர்கள் விவாதம்

சுதா (காங்): இரண்டு ஆண்டுகளாக கூறி வருகிறேன். கூட்டத்திற்கு சர்வேயர் வருவது இல்லை. தாலுகா அலுவலகத்தில் உள்ள அதிகாரி எங்கள் தேவைக்கு தான் வைத்திருப்பதாக சொல்கிறார். எங்கள் வார்டில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. அளக்க கூறி பணம் கட்டப்பட்டுள்ளது. போன் அடித்தால் கூட எடுப்பதில்லை.

தலைவர்: இது தொடர்பாக அனைவரும் தாசில்தார், கோட்டாட்சியரை சந்திப்போம். மக்கள் பிரச்னைக்கு தான் அழைக்கிறோம். கூடுதலாக சர்வேயர்கள் கேட்போம்.

அகிலாகுமாரி (அ.தி.மு.க.) : ஆடு வதை செய்யும் இடத்திற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கடைக்காரரை தவிர மற்ற கடைக்காரர்கள் அங்கு வெட்டுவதில்லை ரோட்டிலேயே வெட்டுகிறார்கள். சான்றிதழ் வழங்க வேண்டிய சுகாதார அலுவலர்கள் செல்வதில்லை.

அய்யப்பன் ( அ.தி.மு.க.): எல்லா பணிகளையும் செய்து வருகிறோம். குப்பை பிரச்னை பெரிய அளவில் வருகிறது.

லோகேஸ்வரி ( காங்.) : அருணகிரி பட்டினம் பகுதியில் மூன்று நாளைக்கு ஒரு முறை குப்பை அள்ள வருகிறார்கள். அடிக்கடி வாகன பேட்டரி ரிப்பேர் என்கிறார்கள்.

வடிவேல் முருகன் (அ.தி.மு.க.) : ஐந்து நாளுக்கு ஒரு முறை தான் குப்பை அள்ள வருகின்றனர். குதிரை பாதை ரோட்டில் கால்வாய் பள்ளமாக இருப்பதால் சாக்கடை நீர் செல்வதில்லை. மீன் கழிவுகளை வீடுகள் அருகே கொட்டுகிறார்கள். புழுக்கள் உருவாகின்றன.

துணைத்தலைவர் : குப்பை பிரச்னைக்கு என்ன செய்யப் போகிறீர்கள். குப்பை அரைக்கும் இயந்திரங்களை வாங்க வேண்டும்.

தலைவர்:குப்பைகளை தினமும் சென்று வாங்க வேண்டும். ஐந்து நாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us