Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருக்கோஷ்டியூர் அருகே மணிமுத்தாறில் 'கஜேந்திர மோட்சம்'

திருக்கோஷ்டியூர் அருகே மணிமுத்தாறில் 'கஜேந்திர மோட்சம்'

திருக்கோஷ்டியூர் அருகே மணிமுத்தாறில் 'கஜேந்திர மோட்சம்'

திருக்கோஷ்டியூர் அருகே மணிமுத்தாறில் 'கஜேந்திர மோட்சம்'

ADDED : ஜூன் 12, 2025 10:59 PM


Google News
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் கஜேந்திர மோட்ச வைபவம் கருவேல்குறிச்சி மணிமுத்தாறில் நடந்தது.

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் கஜேந்திர மோட்ச வைபவம் கருவேல்குறிச்சி மணிமுத்தாறு ஆற்றில் ஆண்டு தோறும் வசந்த உற்ஸவமாக கொண்டாடப்படுகிறது. கஜேந்திர யானைக்கு பெருமாள் மோட்சம் அளிக்கும் புராண நிகழ்வை இங்கு பட்டாச்சாரியார்களால் நிகழ்த்தப்படுகிறது. உற்ஸவர் பெருமாள் அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் ஆடும் பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பாடாகி மணிமுத்தாறு ஆற்று மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து மண்டபத்திலிருந்து புறப்பாடாகி மணிமுத்தாற்றில் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் யானை பங்கேற்க கஜேந்திர மோட்ச வைபவத்தை பட்டாச்சாரியார்கள் நடத்தினர்.

யானைக்கு பெருமாளின் சந்தனம், சடாரி சாத்தப்பட்டது.நிறைவாக பெருமாளை யானை வணங்கி மூன்று முறை வலம் வந்து வழிபட்டது.பெருமாள் மண்டபத்தில் ஆடும் பல்லக்கில் எழுந்தருளினார். ஏற்பாட்டினை கருவேல்குறிச்சி கிராமத்தினர், இளைஞர்கள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us