ADDED : ஜூன் 24, 2024 01:46 AM
தேவகோட்டை : சிவகங்கை மாவட்டத்தில் வனத்துறை சார்பாக மரங்கள் வளர்ப்பில் பரப்பளவை அதிகரிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் தேவகோட்டை, காரைக்குடி உட்பட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களுக்கு பணபலன் தரும் மரங்களான மகாகனி, செம்மரம் , வேம்பு, புளி ஆகிய மரங்களின் வளர்க்கும் வகையில் வனத்துறை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.இந்த மரங்களுக்கான கன்றுகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உருவாக்கப்பட்டு உள்ளது.மரங்கள் வளர்க்க விருப்பம் உள்ளவர்கள் 97869 49432 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.