/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழா முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் விழா
ADDED : மே 13, 2025 06:45 AM

சிவகங்கை : அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர்செந்தில்நாதன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாரதிகண்ணன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பார்த்திபன், திருப்பத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சின்னத்துரை, சிவகங்கை நகர் செயலாளர் என்.எம்.ராஜா, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் இராமு.இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, சேவியர்தாஸ், பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி, பாரதிராஜன், கோபி, முன்னாள்எம்.எல்.ஏ., நாகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து பங்கேற்றனர்.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.சிவகங்கை தாய் இல்லத்தில் அன்னதானம் வழங்கினர்.
மாவட்ட அளவில் அனைத்து ஒன்றியம், நகரங்களில் விழா கொண்டாடினர்.