/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை நெறிமுறைகளை வெளியிட்டு எச்சரிக்கை உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை நெறிமுறைகளை வெளியிட்டு எச்சரிக்கை
உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை நெறிமுறைகளை வெளியிட்டு எச்சரிக்கை
உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை நெறிமுறைகளை வெளியிட்டு எச்சரிக்கை
உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை நெறிமுறைகளை வெளியிட்டு எச்சரிக்கை
ADDED : ஜூன் 21, 2025 11:32 PM

சிவகங்கை: உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவகங்களுக்காக வெளியிட்டுள்ள 14 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு வணிகர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்
அவர் கூறியுள்ளதாவது: அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.உணவு எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும்.
மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெய்யை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கில் உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.
உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.உணவைக் கையாளுபவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றைத் தவறாமல் அணிய வேண்டும்.
உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனி தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிக்கன்65. பஜ்ஜி, போன்ற உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. உணவு வணிகர்கள் அனைவரும் இந்த நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும்.
தவறும் பட்சத்தில் முன்னறிவிப்பின்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.