ADDED : ஜூலை 01, 2025 02:45 AM

தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா கல்லுாரி தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது.
முதல்வர் நாவுக்கரசு மாணவர்கள், பெற்றோர்களை வரவேற்று துறை தலைவர்களை அறிமுகம்செய்தார். துறை தலைவர் சசி கலா, உடற்கல்வி இயக்குனர் லூர்துராஜா கல்லுாரி வசதிகள் பற்றியும், மாணவர்கள் செயல்பாடு பற்றி பேசினர்.
செட்டிநாடு ஹெரிடேஜ் நிர்வாக இயக்குநர்செல்வம் அழகப்பன் மாணவர்களின் கடமை பற்றி பேசினார். தமிழ்த் துறை தலைவர் கண்ணதாசன் நன்றி கூறினார்.