ADDED : ஜூன் 08, 2025 04:43 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.
நிர்வாக அறங்காவலர் அண்ணாமலை தலைமை வகித்தார். தாசில்தார் ஜமுனா முன்னிலை வகித்தார். அறங்காவலர் கருப்பையா வரவேற்றார்.
சிறுவர் பூங்காவை திறந்து வைத்து சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கி குன்றக்குடி பொன்னம்பல அடிகள் கவுரவித்தார்.
சேவைத் திட்டங்களை பிச்சைக்குருக்கள் துவக்கி வைத்தார். வித்யா கணபதி பேசினார். அறங்காவலர் சத்யகுமார் நன்றி கூறினார்.