/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நெல் விதை முளைப்பு தாமதம் களைகளால் விவசாயிகள் கவலை நெல் விதை முளைப்பு தாமதம் களைகளால் விவசாயிகள் கவலை
நெல் விதை முளைப்பு தாமதம் களைகளால் விவசாயிகள் கவலை
நெல் விதை முளைப்பு தாமதம் களைகளால் விவசாயிகள் கவலை
நெல் விதை முளைப்பு தாமதம் களைகளால் விவசாயிகள் கவலை
ADDED : செப் 18, 2025 05:56 AM

சாலைக்கிராமம் : சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதியில் நெல் விதை மானாவாரியாக துாவப்பட்டுள்ள நிலையில் போதிய மழை இல்லாமல் விதை நெல் முளைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாறாக களைச்செடிகள் வேகமாக வளர்வதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட சாலைக்கிராமம்,சூராணம்,முனைவென்றி, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையை நம்பி மானாவாரியாக நெல் விதைகளை விவசாயிகள் துாவியுள்ளனர். தற்போது போதிய மழை இல்லாமல் பெரும்பாலான இடங்களில் விதை நெல் முளைக்காமல் களைச்செடி அதிகமாக வளர்ந்துள்ளது. கோட்டையூரில் நெல் விதை துாவப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் முளைக்காத காரணத்தினால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கோட்டையூர் ஆரோக்கிய மேரி கூறியதாவது: கடந்த 3 வருடங்களாக போதிய மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போன நிலையில் பயிர்க்காப்பீடு செய்தும் காப்பீட்டுத் தொகை வராமல் சிரமப்பட்டு வருகிறோம்.இந்த வருடமும் விதை நெல்களை துாவி நீண்ட நாட்களாகியும் போதிய மழை இல்லாமல் முளைக்காமல் உள்ளது என்றார்.