/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/நாட்டு காய்கறி நடவு செய்த விவசாயிகள் கவலை; வாங்கும் மக்களிடம் ஆதரவில்லை என புகார் நாட்டு காய்கறி நடவு செய்த விவசாயிகள் கவலை; வாங்கும் மக்களிடம் ஆதரவில்லை என புகார்
நாட்டு காய்கறி நடவு செய்த விவசாயிகள் கவலை; வாங்கும் மக்களிடம் ஆதரவில்லை என புகார்
நாட்டு காய்கறி நடவு செய்த விவசாயிகள் கவலை; வாங்கும் மக்களிடம் ஆதரவில்லை என புகார்
நாட்டு காய்கறி நடவு செய்த விவசாயிகள் கவலை; வாங்கும் மக்களிடம் ஆதரவில்லை என புகார்
UPDATED : மே 19, 2025 07:25 AM
ADDED : மே 18, 2025 11:23 PM

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் நாட்டு காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டாலும் பொதுமக்களிடையே வாங்குவதற்கு ஆர்வம் இல்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் நாட்டு காய்கறிகளான கத்தரி, வெண்டை, தக்காளி, புடலங்காய், பாகற்காய் உள்ளிட்டவைகள் சொக்கநாதிருப்பு, பழையனூர், மாரநாடு, அல்லிநகரம், கலியாந்தூர், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. அதிலும் அல்லிநகரம், பழையனூர் பகுதியில் தக்காளிகள் குறைந்த அளவில் பயிரிடப்பட்டன. நாட்டு காய்கறிகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை, தினசரி அறுவடை செய்து லாபம் ஈட்டலாம் என்பதால் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கோடையில் நாட்டு காய்கறிகள் பயிரிடுவது வழக்கம். மதுரை , பரமக்குடி, ராமநாதபுரம் காய்கறி மார்கெட்டில் திருப்புவனம் பகுதி காய்கறிகளான கத்தரிக்காய், பாகற்காய்க்கு நல்ல மவுசு உண்டு.
அதிலும் சொக்கநாதிருப்பு கத்தரிக்காயை பொதுமக்கள் விரும்பி வாங்குவார்கள. கத்தரி, வெண்டை, சீனி அவரைக்காய் உள்ளிட்டவைகளை அவித்து உலர வைத்து வற்றலாக பயன்படுத்தலாம். ஆறு மாதங்கள் வரை வற்றல் கெடாது. மலை காய்கறிகளான பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவற்றில் வற்றல் செய்ய முடியாது. ஆனால் பொதுமக்கள் நாட்டு காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. இதனால் மலை காய்கறிகள் கிலோ 60 ரூபாய் முதல்150 ரூபாய் வரை விற்பனை செய்தாலும் அதனை விரும்பி வாங்குகின்றனர். நாட்டு காய்கறிகள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் வாங்காமல் அலட்சியப் படுத்துவதால் விவசாயிகள் நாட்டு காய்கறிகள் பயிரிட தயக்கம் காட்டுகின்றனர். திருப்புவனம், திருப்பாச்சேத்தி சந்தைகளில் வாரம்தோறும் விவசாயிகளுக்கு தேவையான கத்தரி, வெண்டை, தக்காளி செடிகள் விற்பனை செய்யப்படும், பழையனூர் பகுதியில் நாற்றங்கால் அமைத்து விவசாயிகள் மொத்தமாக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். நோய் தாக்குதல், பன்றிகள் தொல்லை காரணமாக விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு காய்கறிகள் பயிரிடுவதை குறைக்க தொடங்கியுள்ளனர்.
கத்தரி, தக்காளி, வெண்டை உள்ளிட்டவைகள் 70 முதல் 80 நாட்களில் விளைச்சலுக்கு வரும். சீசன் சமயத்தில் நல்ல விலை கிடைக்கும். தற்போது திருப்புவனம் பகுதியில் தக்காளி விவசாயமே கிடையாது. இதே போல் மற்ற நாட்டு காய்கறி விவசாயமும் குறைந்து வருகிறது.
////