/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வறண்ட பூமியில் கோடையிலும் சாதித்த விவசாயிகள் வறண்ட பூமியில் கோடையிலும் சாதித்த விவசாயிகள்
வறண்ட பூமியில் கோடையிலும் சாதித்த விவசாயிகள்
வறண்ட பூமியில் கோடையிலும் சாதித்த விவசாயிகள்
வறண்ட பூமியில் கோடையிலும் சாதித்த விவசாயிகள்
ADDED : மே 23, 2025 11:46 PM

திருப்புத்துார்: வறட்சியான திருப்புத்துார் வட்டாரத்தில் கோடையிலும் நெல் சாகுபடியில் திருக்களாப்பட்டி விவசாயிகள் சாதித்துள்ளனர்.
திருப்புத்துார் பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் பாசனப் பற்றாக்குறை. மழை பெய்து கண்மாயில் நீர் இருந்தாலும், தொழிலாளர் பிரச்னை, மாடுகள் தொல்லையாலும் ஒரு போக நெல்சாகுபடிக்கே விவசாயிகள் தயங்குகின்றனர். இந்நிலையில் திருக்களாப்பட்டி பகுதி விவசாயிகள் முதல் போகம் மட்டுமின்றி கோடை விவசாயமும் செய்து சாதித்து வருகின்றனர்.
கண்மாயில் நீர் இருப்பை முழுமையாக பயன்படுத்தி கோடை நெல்சாகுபடி செய்துள்ள திருக்களாப்பட்டி விவசாயிகள் கூறுகையில், 'காலத்தில் 150 ஏக்கர் பயிரிடுவோம். இப்போது கோடையில் 50 ஏக்கர் பயிரிட்டுள்ளோம். கோ45, மகேந்திரா, சின்ன குண்டு நெல் விதைத்து தற்போது கதிர்கள் பரிந்துள்ளன. கண்மாய், கிணறு நீர் வைத்து நெல்சாகுபடி செய்கிறோம். எங்களுக்கு நெல்சாகுபடி கை கொடுக்கவே செய்கிறது.
நாங்களே களத்தில் வேலை பார்ப்போம். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். கோழி, பால்மாடு வளர்ப்பதும் உதவியாக உள்ளது' என்கிறார்கள்.
நெல்சாகுபடியை முழுமையான தொழிலாக ஏற்றுக் கொண்ட இவர்கள் கண்மாய் நீரை மட்டும் நம்பாமல் முதலீடு செய்து கிணறு, ஆழ்குழாய் கிணறு வசதியும் உருவாக்கியுள்ளனர்.
மேலும் மாடுகள் பறவைகள் பயிரை மேய்ந்து விடாமலிருக்க விதைத்தது முதல் விடிந்தவுடன் குடும்பத்திற்குள் முறை வைத்து ஒருவர் வயலில் வந்து காவல் காப்பதை தினசரி கடமையாக தொடர்ந்து செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான பயிர்கள் பரிந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன.