Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் கையகப்படுத்திய நிலத்தை திருப்பித் தாருங்கள்

பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் கையகப்படுத்திய நிலத்தை திருப்பித் தாருங்கள்

பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் கையகப்படுத்திய நிலத்தை திருப்பித் தாருங்கள்

பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் கையகப்படுத்திய நிலத்தை திருப்பித் தாருங்கள்

UPDATED : செப் 17, 2025 06:43 AMADDED : செப் 17, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பகுதி பெரியாறு கால்வாயில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கவில்லை என்றால் கால்வாய்க்காக கையகப்படுத்திய நிலங்களை திருப்பிக் கொடுங்கள் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

சிங்கம்புணரி மக்களின் குடிநீர், விவசாய தேவைக்காக பெரியாறு ஏழாவது பிரிவு வாய்க்கால் கட்டப்பட்டது. அப்போது கால்வாயை விரைவில் நிரந்தரமாக்கி தருவதாக உறுதியளிக்கப்பட்டதன் பேரில் மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் இருந்து சிங்கம்புணரி, திருப்புத்துார் வரை ஏராளமான விவசாயிகள் நிலங்களை கொடுத்தனர்.

அவர்களில் இன்று வரை சிலருக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கால்வாயை நிரந்தரமாக்கி மற்ற கால்வாய்களுக்கு திறக்கப்படும் போதே இப்பகுதிக்கும் தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் கண்துடைப்புக்காக கடைசி நேரத்தில் சில நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு இப்பகுதி விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

ராம.அருணகிரி, பெரியாறு 7 வது பிரிவு நீட்டிப்பு கால்வாய் தலைவர்: விரைவில் கால்வாயை நிரந்தரமாக்கி தருகிறோம் என்று உறுதி அளித்ததன் பேரில் நிலங்களை அளித்தோம்.

ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் உரிய நேரத்தில் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது கிடையாது.

கால்வாயை நிரந்தரமாக்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகளும், அரசுகளும் கண்டு கொள்ளவில்லை. பல நூறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கால்வாய் பல இடங்களில் உடைந்தும், ஆக்கிரமிக்கப்பட்டும், கற்கள் களவாடப்பட்டும் உள்ளது. சீமைக்கருவேலம், புதர் மண்டி கால்வாய் இருந்த இடம் தெரியாமல் உள்ளது. கால்வாயை சீரமைக்கவோ, கடைமடை வரை தண்ணீரை கொண்டு செல்லவோ அதிகாரிகள் முயற்சிப்பது கிடையாது. வருகின்ற செப்., 18ல் மற்ற கால்வாயில் தண்ணீர் திறக்கும் போதே சிங்கம்புணரி பகுதி குடிநீர் தேவைக்கும் அன்றைய தினமே தண்ணீர் திறக்க வேண்டும்.

இல்லையென்றால் அடுத்த ஓரிரு நாளில் பெரியாறு பாசன விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளும் ஒன்று கூடி உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

தண்ணீரை திறக்காத கால்வாய்க்கு எதற்கு மடை, எதற்காக இடம் கொடுத்தோம் என்று பலரும் கோபத்துடன் உள்ளனர், அவர்கள் நிலத்தை திருப்பி கேட்கவும் தயாராக உள்ளனர்.

எனவே தாமதிக்காமல் சிங்கம்புணரி பகுதிக்கு தண்ணீரை திறக்க வேண்டும். விரைவில் கால்வாயை நிரந்தரமாக்கி அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us