/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விவசாயிகள் கேள்விக்கு பதில் தர மறுக்கும் அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல் விவசாயிகள் கேள்விக்கு பதில் தர மறுக்கும் அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
விவசாயிகள் கேள்விக்கு பதில் தர மறுக்கும் அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
விவசாயிகள் கேள்விக்கு பதில் தர மறுக்கும் அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
விவசாயிகள் கேள்விக்கு பதில் தர மறுக்கும் அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : மே 23, 2025 12:20 AM

சிவகங்கை:குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளால் கொடுக்கப்படும் மனுக்களுக்கு அதிகாரிகள் முறையாக பதில் கூறுவதில்லை என்றும் குறைதீர் கூட்டத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வருவதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
அய்யாச்சாமி, கீழநெட்டூர்: கீழநெட்டூரில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனேந்தல், மணலுார் பகுதியில் சர்வீஸ் ரோடு திறக்கப்படாமல் உள்ளது அதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர்: நெல் கொள்முதல் நிலையம் கட்டடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். சர்வீஸ் ரோடு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பரத்ராஜ், திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில் குப்பை கொட்ட இடம் இல்லை. வைகை ஆற்றில் கொட்டுகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். பேரூராட்சிக்கு குப்பை கொட்ட இடம் தேர்வு செய்ய வேண்டும்.
கருப்பையா, சிறுசெங்குளிபட்டி: விவசாயிகள் கூறும் புகார்களுக்கு அதிகாரிகள் சரியான பதில் தெரிவிப்பதில்லை. முத்துார் வாணியங்குடி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தில் வி.ஏ.ஓ.,விற்கு அலுவலகம் ஒதுக்க வேண்டும்.
சாத்தப்பன் கிளங்காட்டூர்: காளையார்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள மீன் கடைகள், ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
கோபால் ஒய்யவந்தான்: காளையார் கோவிலில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. கல்லல் ரோடு, மறவமங்கலம் ரோட்டில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். ரோட்டோரங்களில் இருக்கும் கிணறுகளில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜான் சேவியர், சாலைக்கிராமம்: சாலைக்கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், இளையான்குடி அரசு மருத்துவமனையிலும் இரவு நேரத்தில் பணியில் டாக்டர்கள் இருப்பதில்லை. ஆரம்ப சுகாதார நியைத்தில் செவிலியரே பிரசவம் பார்க்கும் சூழல் உள்ளது. இரவு நேரத்தில் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர காவலரை பணி அமர்த்த வேண்டும் என்றார்.
கலெக்டர்: ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவ மனையில் பணியில் எப்போதும் டாக்டர் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்தில் போலீசார் மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.