/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/துணை முதல்வர் உதயநிதி இன்று சிவகங்கை வருகையால் தீராத பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்புதுணை முதல்வர் உதயநிதி இன்று சிவகங்கை வருகையால் தீராத பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பு
துணை முதல்வர் உதயநிதி இன்று சிவகங்கை வருகையால் தீராத பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பு
துணை முதல்வர் உதயநிதி இன்று சிவகங்கை வருகையால் தீராத பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பு
துணை முதல்வர் உதயநிதி இன்று சிவகங்கை வருகையால் தீராத பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்ப்பு

காட்சி பொருளானசந்தை, பஸ் ஸ்டாண்ட்
சிவகங்கை நகராட்சி சார்பில் தினசரி சந்தை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.49 கோடியில் 100 கடைகள் கட்ட கட்டுமான பணி நடந்தது. வாகனம் நிறுத்த இடப்பற்றாக்குறை காரணமாக தற்போது 90 கடைகள் கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைகளை பிப்.6,18, மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செயல்படாத வணிக வளாகம்
இதேபோல் சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கி 18 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தும் கடைகளுக்கான வைப்பு தொகை, யாருக்கு இடம் ஒதுக்குவது என்ற பிரச்னையில் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் கடைகள் ஏலம் விடப்படாமல் இழுபறியில் உள்ளது.
நர்சிங் கல்லுாரி வருமா
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை 2012ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இக்கல்லுாரி அமைந்து 13 ஆண்டுகளாகிறது. மருத்துவ கல்லுாரி கட்டுமான பணியின் போதே பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரிக்கான வகுப்பறை, மாணவிகள் விடுதி கட்டடம் கட்டப்பட்டது.