/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும் மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல் வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும் மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்
வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும் மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்
வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும் மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்
வாரிய முடிவுப்படி 10,260 பேரை பணியில் அமர்த்த வேண்டும் மின்ஊழியர் அமைப்பு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 27, 2025 11:57 PM
சிவகங்கை: மின்வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவுபடி 10,260 ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய களப்பிரிவில் 35 ஆயிரம் காலி பணியிடத்திற்கு 1,850 பணியிடம் நிரப்ப மட்டுமே அரசு அறிவிப்பு செய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் நுகர்வோர் சேவை பிரிவு அலுவலகங்களில் 50 சதவீதத்திற்கு மேல் காலிப்பணியிடம் உள்ளது. தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி 10 ஆண்டு பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரிய உயர்நிலை கமிட்டி 5 ஆயிரம் கேங்மேன்கள் புதிதாக எடுக்கலாம் என தெரிவித்தும், இதுவரை பணிகளை துவக்கவில்லை. 107 வது வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவுபடி குறைந்தது 10,260 ஊழியர்களையாவது பணிக்கு எடுக்க வேண்டும் என மின் ஊழியர் அமைப்பு தெரிவித்துள்ளது.