/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் ஆபத்தான ஓட்டு கட்டடத்தில் படிக்கும் அவலம்வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் ஆபத்தான ஓட்டு கட்டடத்தில் படிக்கும் அவலம்
வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் ஆபத்தான ஓட்டு கட்டடத்தில் படிக்கும் அவலம்
வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் ஆபத்தான ஓட்டு கட்டடத்தில் படிக்கும் அவலம்
வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் ஆபத்தான ஓட்டு கட்டடத்தில் படிக்கும் அவலம்
ADDED : ஜன 06, 2024 06:01 AM

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே வெள்ளியங்குடிபட்டி பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்களுக்கு ஆபத்தான ஓட்டு கட்டடத்தில் வகுப்பு நடக்கிறது.
இவ்வொன்றியத்தில் கே.நெடுவயல் ஊராட்சி வெள்ளியங்குடிபட்டியில் உள்ள பள்ளி 2008ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து 2011ல் 3 வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
மாணவர்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 100 வரை உயர்ந்த நிலையில் வகுப்பறை போதவில்லை. இதனால் பழைய ஓட்டு கட்டடத்தில் ஆபத்தான நிலையில் 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
இரண்டு கட்டடத்திற்கும் இடையில் 50 மீட்டர் துாரம் உள்ளதால் ஆசிரியர்கள் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
சத்துணவு பெற மாணவர்கள் மதிய நேரத்தில் ரோட்டில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இக்கிராமத்தைச் சுற்றியுள்ள அய்யாபட்டி, பழைய நெடுவயல், கோட்டை நெடுவயல், மாந்தங்குடிபட்டி, புதுவாடி, பண்ணபட்டி, காயாம்பட்டி, சுள்ளாம்பட்டி, ஆரணிபட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்நிலைக் கல்விக்காக நீண்ட தொலைவில் உள்ள எஸ்.புதுார், உலகம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாத நிலையில் பல மாணவர்கள் வெளி மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர்.
வெள்ளியங்குடிபட்டி பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால் 10 க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பள்ளியை பொறுத்தவரை 2 ஏக்கர் நிலம் உள்ளது. எனவே விரைவில் பள்ளியை தரம் உயர்த்தி கூடுதல் கட்டடங்களை கொண்டு வர அப்பகுதி பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.