/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
ADDED : ஜூன் 21, 2025 11:30 PM
சிவகங்கை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 23 முதல் 27 வரை போதை பொருள் விழிப்புணர்வு' வாரம் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களிடம், போதை பொருள் விழிப்புணர்வை வழங்க வேண்டும்.
ஒரு வாரம் பல்வேறு விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட வேண்டும். ஜூன் 23ல் போதை பொருள் வேண்டாம்' என்ற தலைப்பில் ஸ்லோகன்' எழுதுதல் போட்டி, ஜூன் 24 ல் நண்பர்களின் அழுத்தத்திற்கு எதிரான தனிப்பட்ட தேர்வு என்ற தலைப்பில் நாடகம், ஜூன் 25ல் நான் ஏன் போதை பொருளை தவிர்க்கிறேன்,' என்ற தலைப்பில் பேச்சு போட்டி, ஜூன் 26ல் ஆரோக்கியமான உடல், வலுவான மனம் என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு ஓட்டம், கயிறு தாவுதல், குழு போட்டிகள் நடத்த வேண்டும். ஜூன் 27 அன்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, பாராட்ட வேண்டும். மேலும் போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியை மாணவர்கள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.