/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இளையான்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு இளையான்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு
இளையான்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு
இளையான்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு
இளையான்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு
ADDED : செப் 17, 2025 02:35 AM

இளையான்குடி : இளையான்குடியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நீண்ட நாட்களாக கேட் வால்வில் இருந்து குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அலுவலகங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 20 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வாகனங்களில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி வருகின்றனர்.
10வது வார்டு பகுதியில் உள்ள சக்கரை அம்பலம் தெருவில் உள்ள கேட் வால்விலிருந்து தண்ணீர் திறக்கப்படும் போது குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடமும், குடிநீர் திட்ட ஊழியர்களிடமும் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.