ADDED : ஜன 08, 2025 06:18 AM

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட தி.மு.க., சார்பில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், நகர் செயலாளர் துரைஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
காரைக்குடி மேயர் முத்துதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், நெடுஞ் செழியன், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.