/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாவட்ட அளவில் தாசில்தார்கள் மாறுதல் உத்தரவில்...பாரபட்சம்: பல ஆண்டுகள் ஒரே இடத்தில் வைத்திருப்பது ஏன் மாவட்ட அளவில் தாசில்தார்கள் மாறுதல் உத்தரவில்...பாரபட்சம்: பல ஆண்டுகள் ஒரே இடத்தில் வைத்திருப்பது ஏன்
மாவட்ட அளவில் தாசில்தார்கள் மாறுதல் உத்தரவில்...பாரபட்சம்: பல ஆண்டுகள் ஒரே இடத்தில் வைத்திருப்பது ஏன்
மாவட்ட அளவில் தாசில்தார்கள் மாறுதல் உத்தரவில்...பாரபட்சம்: பல ஆண்டுகள் ஒரே இடத்தில் வைத்திருப்பது ஏன்
மாவட்ட அளவில் தாசில்தார்கள் மாறுதல் உத்தரவில்...பாரபட்சம்: பல ஆண்டுகள் ஒரே இடத்தில் வைத்திருப்பது ஏன்
ADDED : செப் 01, 2025 02:15 AM

சிவகங்கை: -சிவகங்கை மாவட்ட அளவில் பணிபுரியும் 54 தாசில்தார்களில் 11 பேருக்கு மட்டுமே, பணியிட மாறுதல் வழங்கிய கலெக்டர், தொடர்ந்து பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் தாசில்தார்களை மாற்றாமல் இருப்பது ஏன் என வருவாய்துறையினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை கோட்டாட்சியரின் கீழ் 9 தாலுகாக்களில் தாசில்தார்கள் பணிபுரிகின்றனர். இது தவிர டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம், தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, கலெக்டர் அலுவலகத்தில் நில எடுப்பு, மேலாளர், ஆதிதிராவிடர் நலம் உட்பட பல்வேறு பிரிவுகளில் தாசில்தார் நிலையில் 54 பேர்கள் வரை பணிபுரிகின்றனர். ஒவ்வொரு பணியிடங்களிலும் தாசில்தார்கள் ஒரு ஆண்டு மட்டுமே பணிபுரிய வேண்டும். குறிப்பாக தாலுகா அலுவலகங்களில் தனி பொறுப்பு வகிக்கும் தாசில்தார்களை கண்டிப்பாக ஒரு ஆண்டு முடிவில் மாற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து பல ஆண்டாக பணிபுரியும் தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்யாமல், மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் சிவகங்கை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய தாலுகாக்கள், ஹிந்து அறநிலைய உதவி கமிஷனர் அலுவலகம், நில எடுப்பு, வட்ட வழங்கல் அலுவலர் போன்ற பதவிகளில் இருந்த 11 தாசில்தார்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். * பணியிட மாறுதலில் பாரபட்சம்: இந்நிலையில் தேவகோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்துார், இளையான்குடி, மானாமதுரை ஆகிய தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், பிற தனிப்பிரிவு தாசில்தார்களுக்கு பணியிட மாறுதல் வழங்காமல், மாவட்ட நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பல ஆண்டுகளாக ‛சிபாரிசின்' பேரில் ஒரே தாலுகாவில் பணிபுரியும் தாசில்தார்கள் சிலரை பணியிட மாற்றம் செய்ய, மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக வருவாய்துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒரே தாலுகாவில் பல ஆண்டாக பணிபுரிந்த தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்யாமல் இருப்பதால், 2026 சட்டசபை தேர்தலில் ஒரு கட்சியினருக்கு சாதகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட வாய்ப்பு அதிகம் ஏற்படும். இதை தவிர்க்க விடுபட்ட அனைத்து தாலுகாவில் உள்ள தாசில்தார்களையும் பாரபட்சமின்றி பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வருவாய்துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. ///