/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் ஜூன் 17 உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கல் சிவகங்கையில் ஜூன் 17 உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கையில் ஜூன் 17 உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கையில் ஜூன் 17 உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகங்கையில் ஜூன் 17 உதயநிதி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜூன் 11, 2025 02:55 AM
சிவகங்கை:சிவகங்கையில் ஜூன் 17 ல் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி வழங்க உள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி மாவட்டங்கள் வாரியாக அரசின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் சிவகங்கையில் 10 மாதங்களுக்கு முன் ஆய்வு கூட்டம் நடத்தி சரியாக பணி செய்யாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
மீண்டும் சிவகங்கையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை ஜூன் 17 கலெக்டர் அலுவலகத்தில் நடத்தவுள்ளார். அன்று பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கள ஆய்வு செய்யவும் உள்ளார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.
இதற்கான பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு, ஆய்வு கூட்ட ஏற்பாடுகளை கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.