ADDED : ஜூன் 06, 2025 02:40 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், ஆயுதப்படையில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி ஆய்வு செய்தார். நகர், தாலுகா, மகளிர், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன், தடயவியல் துறை, எஸ்.பி., அலுவலக மாஸ்டர் கன்ட்ரோல் ரூம் உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது சட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். எஸ்.பி., ஆஷிஷ் ராவத், ஏ.டி.எஸ்.பி., பிரான்சிஸ் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.