/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நிதி ஒதுக்கியும் வாடகை, கூலி கிடைக்காமல் தவிப்பு நிதி ஒதுக்கியும் வாடகை, கூலி கிடைக்காமல் தவிப்பு
நிதி ஒதுக்கியும் வாடகை, கூலி கிடைக்காமல் தவிப்பு
நிதி ஒதுக்கியும் வாடகை, கூலி கிடைக்காமல் தவிப்பு
நிதி ஒதுக்கியும் வாடகை, கூலி கிடைக்காமல் தவிப்பு
ADDED : செப் 10, 2025 07:54 AM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கும் பணிக்காக விற்பனையாளர்களுக்கான வண்டி வாடகை, ஏற்று இறக்கு கூலி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு சார்பில் 'தாயுமானவன்' திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழக அளவில் 21.70 லட்சம் கார்டுகளை சேர்ந்த 71 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே விற்பனையாளர்கள் சென்று பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர்.
வண்டி வாடகை, ஏற்று இறக்கு கூலியாக ஒரு கார்டிற்கு கிராமத்திற்கு ரூ.40, நகருக்கு ரூ.36, மலைப்பகுதிக்கு ரூ.100 வீதம் விடுவிக்கப்படும்.
அரசு ரூ.31 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.
கூட்டுறவு அமைச்சரின் சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள 856 ரேஷன் கடைகளை சேர்ந்த 33 ஆயிரத்து 294 ரேஷன் கார்டுகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்து வருகின்றனர்.
வாரத்தில் 2 வது சனி, ஞாயிறன்று இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இம்மாவட்டத்தில் 65 ஆயிரத்து 690 பேர் பயன்பெறுகின்றனர்.
மாவட்ட அளவில் 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் உள்ள ரேஷன் கடைகள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு எடுத்து செல்வதற்கான வண்டி வாடகை, ஏற்று இறக்கு கூலி என அனைத்தையும், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அந்தந்த விற்பனையாளர்களுக்கு விடுவிக்க வேண்டும்.
இத்தொகையை அரசு தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விடுவிக்கவில்லை.
ஓரளவிற்கு நிதி வசதியுள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மட்டுமே அந்தந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு வண்டி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை விடுவித்துள்ளனர்.
ஆனால், நிதிவசதியில்லாத பெரும்பாலான தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்னும் வண்டி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை விடுவிக்காததால், விற்பனையாளர்கள் திணறி வருகின்றனர்.