/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் நுாற்றாண்டை கடந்த கட்டடம் இடிப்பு திருப்புவனத்தில் நுாற்றாண்டை கடந்த கட்டடம் இடிப்பு
திருப்புவனத்தில் நுாற்றாண்டை கடந்த கட்டடம் இடிப்பு
திருப்புவனத்தில் நுாற்றாண்டை கடந்த கட்டடம் இடிப்பு
திருப்புவனத்தில் நுாற்றாண்டை கடந்த கட்டடம் இடிப்பு
ADDED : மே 27, 2025 01:00 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நுாற்றாண்டை கடந்த சார்பதிவாளர் கட்டடம் பழுதடைந்ததால் அதனை இடிக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் இடங்களில் திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகமும் ஒன்று. இங்கு சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த இடம், வீடு, விவசாய நிலங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகின்றன.
1882ஆம் ஆண்டு கட்டப்பட்ட நூற்றாண்டை கடந்த இந்த கட்டடம் பழுதடைந்து பல இடங்களில் சேதமடைந்துள்ளதுடன் மழை காலங்களில் கட்டடத்தினுள் மழை நீரும் புகுந்து ஆவணங்கள் சேதமடைந்தன. 15க்கும் மேற்பட்ட மரங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த பகுதியில் புதிய கட்டடம் மூன்றரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.
இதற்காக பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது.