ADDED : அக் 18, 2025 03:53 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் ரோட்டில் காரையூர் அருகே மான் காயங்களுடன் இறந்து கிடந்தது.
வனத் துறையினர் விசாரணையில் இறந்த புள்ளி மான் ஆண், ஒரு வயது என்பதும், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தது தெரியவந்தது. மகிபாலன்பட்டி கால்நடை மருத்துவர் முத்துமீனாள் உடற் கூராய்வு செய்தார்.


