/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்படும் கட்டுமான பொருட்களால் பாதிப்பு விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்படும் கட்டுமான பொருட்களால் பாதிப்பு
விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்படும் கட்டுமான பொருட்களால் பாதிப்பு
விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்படும் கட்டுமான பொருட்களால் பாதிப்பு
விளையாட்டு மைதானத்தில் குவிக்கப்படும் கட்டுமான பொருட்களால் பாதிப்பு
ADDED : ஜூன் 30, 2025 06:45 AM

மானாமதுரை : மானாமதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்டுமான பொருட்களை குவித்து வைப்பதினால் மாணவர்கள், இளைஞர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை,சிவகங்கை ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., உயர்நிலை பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்களின் விளையாட்டுத் திறமையில் வளர்க்கும் விதத்தில் பள்ளிக்கு பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது.
இங்கு கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் நடக்கும் ரோடு, கழிவு நீர் வாய்க்கால் மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் ஜல்லிகற்கள் மணல், கிராவல் மணல் போன்றவற்றை அதிகளவில் குவித்து வைப்பதினால் மாணவர்கள் விளையாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மைதானத்தில் நடைபயிற்சியும் சென்று வருகின்ற நிலையில் மைதானத்தில் எங்கு பார்த்தாலும் கற்களாக கிடப்பதினால் நடக்க முடியாமலும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்த ஏராளமான மாணவிகளும் அங்கு மைதானம் இல்லாததினால் இந்த மைதானத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
போலீஸ் மற்றும் ராணுவ தேர்வுகளுக்காக இளைஞர்கள் இங்கு பயிற்சி பெறுகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த மைதானத்தில் எங்கு பார்த்தாலும் கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளனர்.
மேலும் இரவில் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து போடுவதால் நடைபயிற்சி செய்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
மைதானத்தில் குவித்து வைத்துள்ள கட்டுமான பொருட்களை அகற்ற வேண்டும், என்றனர்.