ADDED : மே 30, 2025 03:19 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே ஜமீன்தார்பட்டியில் முனியய்யா கோயிலில் படைப்புத் திருவிழா நடந்தது. விவசாயம் செழிக்கவும் நோய் நொடியின்றி வாழவும் இக்கிராமத்தினர் ஆண்டு தோறும் வைகாசியில் இவ்விழா எடுக்கின்றனர்.
விழாவை முன்னிட்டு கிராம மந்தையிலிருந்து மேளதாளம் முழங்க கிராமத்தினர் ஊர்வலமாக வந்தனர். ஊர் எல்லையில் கண்மாய் கரையில் எழுந்தருளியுள்ள முனியய்யா கோயிலுக்கு சென்றடைந்தனர். கோயிலில் சாமியாட்டத்திற்கு பின்னர் கிராமத்தினர் பூமாலை சாத்தியும், தேங்காய் உடைத்தும் சுவாமி வழிபாடு நடத்தினர்.