ADDED : மார் 24, 2025 05:42 AM
திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே சுண்டக்காட்டில் கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் மேய்ந்த அவருடைய பசுமாடு தவறி அங்கிருந்த கிணற்றில் விழுந்து விட்டது.
தகவலறிந்த திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.