/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நுகர்பொருள் வாணிப கழக லோடுமேன்கள் ஸ்டிரைக் நுகர்பொருள் வாணிப கழக லோடுமேன்கள் ஸ்டிரைக்
நுகர்பொருள் வாணிப கழக லோடுமேன்கள் ஸ்டிரைக்
நுகர்பொருள் வாணிப கழக லோடுமேன்கள் ஸ்டிரைக்
நுகர்பொருள் வாணிப கழக லோடுமேன்கள் ஸ்டிரைக்
ADDED : ஜூன் 27, 2025 11:51 PM
சிவகங்கை: வாணிப கழக கோடவுனில் வருகை பதிவில் சேர்க்காத 524 லோடுமேன்களின் பெயர்களை சேர்க்க கோரி, சிவகங்கை மாவட்டத்தில் 94 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 9 இடங்களில் நுகர்பொருள் வாணிப கழக கோடவுன் இயங்கி வருகிறது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு தினமும் 18 டன் வரை அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை லோடுமேன்கள் மூலம் லாரிகளில் அனுப்பப்படுகிறது.
இது தவிர கோடவுன்களுக்கு வரும் உணவு பொருட்களையும் ஏற்றி, இறக்கி வருகின்றனர்.
இவர்களில் 524 பேர்களின் பெயர்களை வருகை பதிவேட்டில் ஏற்ற வலியுறுத்தியும், லோடுமேன்களில் 'பிங்க் கலர்' அட்டை வைத்துள்ளவர்கள் 9 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் அவர்களுக்கு பச்சை கலர் அட்டை வழங்கி, அரசின் அனைத்து பணப்பிடித்தமும், பணி ஓய்வின் போது முழு பணப்பலன் வழங்கப்படும். ஆனால், 9 ஆண்டுகளை கடந்தும் லோடு மேன்களுக்கு வழங்கப்படாத பச்சை கலர் அட்டையை வழங்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் பணிபுரியும் 94 லோடுமேன்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.