/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் விவசாய பிரதிநிதியுடன் ஆலோசனை சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் விவசாய பிரதிநிதியுடன் ஆலோசனை
சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் விவசாய பிரதிநிதியுடன் ஆலோசனை
சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் விவசாய பிரதிநிதியுடன் ஆலோசனை
சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம் விவசாய பிரதிநிதியுடன் ஆலோசனை
ADDED : மே 20, 2025 01:00 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பிரச்னையாக இருந்து வரும் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது.
மாவட்டத்தில் பெரியாறுவைகை பாசனம், கிணற்று பாசனம், மானாவாரியாக விவசாயிகள் நெல் நடவு செய்து வருகின்றனர்.அதே போன்று நிலக்கடலை, காய்கறி, பருத்தி, மிளகாய் என மாவட்ட அளவில் 2.5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இம்மாவட்ட விவசாயிகளுக்கு பிரச்னையாக கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துஉள்ளன. கருவேல் மர புதருக்குள் குடியிருக்கும் நாட்டு பன்றிகள், இரவில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண, மாவட்ட அளவில் கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய், திறந்த வெளிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அழிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சீமைக்கருவேல் அகற்ற ஆலோசனை
மாவட்ட அளவில் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது. இதற்காக கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்கள் (மணிமுத்தாறு) சவுந்திரம், (சருகணியாறு) ரமேஷ், அனைத்து தாசில்தார், பி.டி.ஓ.,க்கள், விவசாயிகள் பிரதிநிதிகள் சார்பில் அய்யாச்சாமி, ஆதிமூலம், ராமலிங்கம், அப்துல்ரஹ்மான் ஆலோசனை வழங்கினர்.
கலெக்டருக்கு அறிக்கை
பொதுப்பணித்துறை பொறியாளர், பி.டி.ஓ.,க்கள் வனத்துறை அளித்துள்ள மதிப்பீடு வழிகாட்டுதல் பணி கண்மாய், நீர்நிலைகளில் வளர்ந்துஉள்ள சீமைக்கருவேல மரங்களை கணக்கிட்டு 10 நாட்களுக்குள் கலெக்டருக்கு அறிக்கை வழங்க வேண்டும்.
முதற்கட்டமாக ஒட்டு மொத்தமாக 50 கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்ற டெண்டர் விட்டு, ஜூன் 30 க்குள் அவற்றை அகற்றுவது. படிப்படியாக அனைத்து சீமைக்கருவேல் மரங்களை அகற்றி, விவசாயத்தை அழிக்கும் நாட்டு பன்றிகளை ஒழிப்பது என முடிவு செய்துள்ளனர்.