/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு பாதுகாப்புடன் இருக்க கலெக்டர் தகவல் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு பாதுகாப்புடன் இருக்க கலெக்டர் தகவல்
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு பாதுகாப்புடன் இருக்க கலெக்டர் தகவல்
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு பாதுகாப்புடன் இருக்க கலெக்டர் தகவல்
கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு பாதுகாப்புடன் இருக்க கலெக்டர் தகவல்
ADDED : மார் 25, 2025 05:25 AM
சிவகங்கை: கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இம்மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, அதிக வெப்ப நிலை நிலவக்கூடும். வெப்பம், வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அதன்படி மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். டீ, காபி, குளிர்பானங்களை தவிர்த்து ஓ.ஆர்.எஸ்., கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், பழச்சாறுகள் அருந்தலாம். காய்கறி, பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட வேண்டும். துரித மற்றும் காரமான உணவுகளை தவிர்க்கவும்.
நல்ல காற்றோட்டமான இடத்தில் வசிக்க வேண்டும். பருத்தி ஆடைகளையே உடுத்தி செல்லுங்கள். மதிய நேரத்தில் வெளியே சென்றால் குடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து செல்லலாம். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கம் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுகவும்.
நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தரமான குடிநீர் கிடைப்பதை ஊராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். முதியவர்கள் உரிய பாதுகாப்புடன், மதியம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை நிழல்தரும் கூரைகளின் கீழ் தங்க வைக்க வேண்டும். போதிய நீர், தீவனம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வீட்டில் வளர்க்கும் பறவைக்கு போதிய நீர் வைக்க வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தால் வீட்டு மின்இணைப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் மின் சாதன பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கூரை வீடுகளில் எளிதில் தீப்பற்றாத வகையில் ஆவணங்களை பாதுகாப்புடன் வைக்க வேண்டும், என்றார்.