இடிந்து விழும் போலீஸ் குடியிருப்பு
இடிந்து விழும் போலீஸ் குடியிருப்பு
இடிந்து விழும் போலீஸ் குடியிருப்பு
ADDED : ஜூன் 19, 2025 02:41 AM
சிவகங்கை: சிவகங்கை வாரச்சந்தை அருகேயுள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளன.
இதில் தற்போது டவுன் போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கட்டடம் முறையான பராமரிப்பின்றி கூரை பெயர்ந்து விழுகின்றன. சில கட்டடங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த கட்டடத்தில் வசித்தவர்கள் தற்போது வெளியில் வாடகைக்கு தங்கி உள்ளனர். அடிக்கடி சிமென்ட் காரை பெயர்ந்து விழுவதால் போலீஸ் குடும்பத்தினர் அச்சத்தில் இருப்பதாகவும் பழைய குடியிருப்புகளை அப்புறப்படுத்தி விட்டு புது குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.