/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அங்கன்வாடி மையங்களில் ஜூன் முதல் குழந்தைகள் சேர்க்கை அங்கன்வாடி மையங்களில் ஜூன் முதல் குழந்தைகள் சேர்க்கை
அங்கன்வாடி மையங்களில் ஜூன் முதல் குழந்தைகள் சேர்க்கை
அங்கன்வாடி மையங்களில் ஜூன் முதல் குழந்தைகள் சேர்க்கை
அங்கன்வாடி மையங்களில் ஜூன் முதல் குழந்தைகள் சேர்க்கை
ADDED : மே 31, 2025 12:21 AM
சிவகங்கை: அங்கன்வாடி மையங்களில் ஜூன் முதல், 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சேர்க்கை நடைபெறும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,552 அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு குழந்தைகளுக்கு சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது. குறிப்பாக வயது 2 முதல் 5 க்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி, செய்கைபாடல், கதை, விளையாட்டு கல்வி உபகரணங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சி ஏற்படும்.
தங்கள் குழந்தைகளை சேர்த்து பயன் பெறலாம். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் முகாமும் நடப்பதால், இச்சேவையை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.