/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முதல்வரின் மருத்துவ காப்பீடு ரூ.53.86 கோடிக்கு சிகிச்சை முதல்வரின் மருத்துவ காப்பீடு ரூ.53.86 கோடிக்கு சிகிச்சை
முதல்வரின் மருத்துவ காப்பீடு ரூ.53.86 கோடிக்கு சிகிச்சை
முதல்வரின் மருத்துவ காப்பீடு ரூ.53.86 கோடிக்கு சிகிச்சை
முதல்வரின் மருத்துவ காப்பீடு ரூ.53.86 கோடிக்கு சிகிச்சை
ADDED : ஜூன் 17, 2025 11:27 PM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 57,610 பேர்களுக்கு ரூ.53.86 கோடி செலவில் உயர் சிகிச்சை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 36,829 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 14 ஆயிரத்து 527 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
புதுமை பெண் திட்டத்தில் 7752 கல்லுாரி மாணவிகள், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 6453 கல்லுாரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை பெறுகின்றனர். அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 428 மகளிர் மாதம் ரூ.1000 வீதம் உரிமை தொகை பெற்று வருகின்றனர்.
அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1741 பேர்களுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கி, இது வரை 593 பேர் வீடு கட்டியுள்ளனர்.
இன்னுயிர், நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் 11,471 பேர்களுக்கு ரூ.9.20 கோடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 57,610 பேர்களுக்கு ரூ.53.86 கோடி செலவில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இது வரை மாவட்ட அளவில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 498 பேர்களுக்கு தொடர் சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.