/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முதல்வர் கோப்பை ஹாக்கி; ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி முதலிடம் முதல்வர் கோப்பை ஹாக்கி; ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி முதலிடம்
முதல்வர் கோப்பை ஹாக்கி; ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி முதலிடம்
முதல்வர் கோப்பை ஹாக்கி; ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி முதலிடம்
முதல்வர் கோப்பை ஹாக்கி; ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி முதலிடம்
ADDED : செப் 02, 2025 11:52 PM

சிவகங்கை; முதல்வர் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது.
சிவகங்கை மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஆக. 26 முதல் செப்.10ம் தேதி வரை நடக்கிறது.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நேற்று சிவகங்கை விளையாட்டு திடலில், பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில் முதலிடத்தை சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி, இரண்டாம் இடத்தை சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலை பள்ளி, மூன்றாம் இடத்தை திருமாஞ்சோலை அரசு மேல்நிலை பள்ளி ஹாக்கி அணி வீராங்கனைகள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.