ADDED : ஜூன் 07, 2025 12:19 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறும்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். மே31 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
இன்று காலை 7:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து உற்ஸவ நடராஜர் புறப்பாடு நடைபெறும். இரவு 8:00 மணிக்கு தீபாராதனை முடிந்து சுவாமி-அம்பாள் குதிரை வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.
நாளை ஒன்பதாம் நாளை முன்னிட்டு காலை 5:30 மணிக்கு விநாயர், சிவகாமி அம்மன், சுவாமி ஆகியோர் தேர்களில் எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து சுவாமிக்கு மக்கள் அர்ச்சனை செய்து வழிபடுவர். மதியம் 3:00 மணிமுதல் 4:15 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும்.
ஜூன் 9ல் காலை 9:00 மணிக்கு சீதளி தெப்பக்குளத்தில் தீர்த்தம் வழங்குதலும், இரவு 8:00 மணிக்கு தெப்பமும் நடைபெறும்.