/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பை தடுக்க சென்டர் மீடியன் திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பை தடுக்க சென்டர் மீடியன்
திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பை தடுக்க சென்டர் மீடியன்
திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பை தடுக்க சென்டர் மீடியன்
திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பை தடுக்க சென்டர் மீடியன்
ADDED : ஜூன் 13, 2025 11:40 PM
திருப்புவனம்:திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் மீண்டும் ஆக்கிரமிக்காவண்ணம் தடுக்க சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புவனம் நகர் வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 20 மீட்டர் அகலமுள்ள சாலையை பலரும் ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில்: திருப்புவனத்தில் 20 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை சாலையின் அகலம் உள்ளது.
ஆனால் சாலை ஆக்கிரமிக்கப்பட்டதால், ஏழு மீட்டர் அகலமே இருந்தது. ஒரு பஸ்சின் அகலம் மூன்று மீட்டர், எதிர் எதிரே பஸ்கள் வரும் போது விலக முடிவதில்லை.
எனவே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை முழுவதுமாக அளவிடப்பட்டுள்ளது.
சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைத்து டூவீலர் பார்க்கிங் செய்ய தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் பணிகள் தொடங்க உள்ளது, என்றனர்.