ADDED : மே 31, 2025 12:22 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் பிள்ளையார்பட்டியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் சார்பில் நடத்தப்படும் இலவச தொழில் பயிற்சி முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சி மையத்தில் ஒரு நாள் பயிற்சியாக ஜூன் 13 ல் உணவு பொருட்கள் உரிமம், லேபிளிங் மற்றும் பேக்கேஜிங் குறித்தும், ஜூன் 16 ல் வணிக ரீதியிலான ஆடு,கோழி தீவனம் தயாரிப்பு, ஜூன் 17 ல் மாம்பழம் மதிப்புகூட்டல் மற்றும் பதப்படுத்துதல், ஜூன் 19 ல் பஞ்சகவ்யா விளக்கு,பஞ்ச காவ்யா சாம்பிராணி தயாரிப்பு, ஜூன் 20ல் சிப்பி மற்றும் பால் காளான் வளர்த்தல், சந்தைப்படுத்துதல், ஜூன் 21ல் தேனீ வளர்த்தல் மற்றும் பராமரித்தல் குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
மேலும் இரண்டு நாள் பயிற்சி முகாமாக ஜூன் 23ல் தரை துடைக்கும் திரவம்,பாத்திரம் கழுவும் திரவம்,கழிப்பறை சுத்தம் செய்யும் திரவம் தயாரிப்பு, ஜூன் 16ல் சிறுதானியத்தில் குக்கீஸ், பிரவுனி தயாரித்தல் ஆகியவற்றில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பதிவு செய்ய 94885 75716 ல் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு முதலில் பதிவாகும் தலா 50 பேருக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்படும்.