/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூட்டுறவு மாரத்தான் வீரர்களுக்கு அழைப்பு கூட்டுறவு மாரத்தான் வீரர்களுக்கு அழைப்பு
கூட்டுறவு மாரத்தான் வீரர்களுக்கு அழைப்பு
கூட்டுறவு மாரத்தான் வீரர்களுக்கு அழைப்பு
கூட்டுறவு மாரத்தான் வீரர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 17, 2025 11:24 PM
சிவகங்கை: சிவகங்கை கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது: சென்னை தீவுத்திடலில் ஜூலை 6 ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு கூட்டுறவு துறை சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.
தீவுத்திடலில் துவங்கி சுவாமி சிவானந்தா சாலை, மன்றோ சிலை வழியாக மீண்டும் தீவுத்திடலில் நிறைவு பெறும். மாரத்தான் ஓட்டம் வயது 18 முதல் 40 மற்றும் வயது 40 க்கும் மேல் என இரு பிரிவாக போட்டி நடைபெறும். இருபாலருக்கு போட்டி நடத்தப்படும்.
முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வீதம் வழங்கப்படும்.
இம்மாரத்தானில் பங்கேற்க விரும்புவோர் http://www.tncu.tn.gov.in/marathon/regster என்ற இணையதளத்தில் நுழைவு கட்டணம் ரூ.100 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். சென்னையில் நடைபெற உள்ள கூட்டுறவு மாரத்தான் போட்டியில் பங்கேற்க சிவகங்கை வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. விபரங்களுக்கு 97909 54671 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.