Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மாவட்டத்தில் நலிவடையும் விவசாயத்தால் வியாபாரம் பாதிப்பு

மாவட்டத்தில் நலிவடையும் விவசாயத்தால் வியாபாரம் பாதிப்பு

மாவட்டத்தில் நலிவடையும் விவசாயத்தால் வியாபாரம் பாதிப்பு

மாவட்டத்தில் நலிவடையும் விவசாயத்தால் வியாபாரம் பாதிப்பு

ADDED : செப் 04, 2025 04:17 AM


Google News
பழையனுார்: சிவகங்கை மாவட்டத்தில் விவசாய சாகுபடி பரப்பளவு குறைவதால் அதனை சார்ந்த தொழில்கள், சிறு சிறு கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

திருப்புவனம் தாலுகாவில் வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பியே நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்யப்படுகிறது. பருவம் தவறாமல் மழை பெய்த காலங்களில் விவசாயம் நடந்து வந்தது. சம்பா பருவத்திற்கு நெல் நடவு பணிகள் ஆகஸ்டிலேயே தொடங்கி விடும் .மோட்டார் பாசன விவசாயிகள் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே நாற்றங்கால் தயாரிப்பது, வரப்பு வெட்டுவது உள்ளிட்ட பணிகளை தொடங்கி விடுவார்கள்.

இந்தாண்டு இதுவரை நாற்றங்கால் அமைக்கும் பணி தொடங்கவே இல்லை. நாற்றங்கால் அமைக்க, வரப்பு வெட்ட கூலி ஆட்கள் தேவைப்படுவார்கள். வயல்களில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு வடை, டீ, காபி உள்ளிட்டவை தினசரி இரு வேளை வழங்கப்படும். விவசாய வேலை தொடங்க, அறுவடை தொடங்க உள்ளிட்ட நேரங்களில் பூஜை செய்து தொடங்குவார்கள், பூஜை பொருட்கள், டீ வாங்க அருகில் உள்ள கிராமங்களுக்கு விவசாயிகள் செல்வார்கள், இவர்களை நம்பி கடைகள், விவசாய கருவிகளான களைவெட்டி, அரிவாள், மருந்து தெளிக்கும் இயந்திரம் என பொருட்களை விற்பனைக்கும் வாடகைக்கும் வழங்குவார்கள், இந்தாண்டு ஆகஸ்ட் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் பணிகள் தொடங்கவில்லை. பழையனுாரில் டீ கடைகள், ஓட்டல்கள், உர கடைகளில் போதிய அளவு வியாபாரமே இல்லை.

டீ கடை உரிமையாளர்கள் கூறுகையில்: பழையனுாரில் ஐந்திற்கும் மேற்பட்ட டீ கடைகள் உள்ளன. தினசரி 50 லிட்டர் பால் வரை வாங்கி டீ விற்பனை செய்வோம், பெரும்பாலும் வாளியில் டீ வாங்கி செல்வார்கள், டீயுடன், வடை, பஜ்ஜி, போண்டா, பயிறு வகைகள் என ஏராளமானவை விற்பனையாகும்.தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லிட்டர் பால் தான் வாங்குகிறோம், அதிலும் மீதமாகி வருகிறது. விவசாய பணிகள் இல்லாததால் வியாபாரமே இல்லை. வேறுவழியின்றி டீ கடைகளை நடத்தி வருகிறோம், என்றனர்.

டீ கடைகள் மட்டுமல்லாது உர கடைகளிலும் உரம், பூச்சி மருந்து, ஸ்பிரேயர்கள் உள்ளிட்ட எந்த வியாபாரமும் இல்லை. மழை பெய்து கண்மாய் நிரம்பினால் மட்டுமே விவசாய பணிகள் தொடங்கி மற்ற வியாபாரமும் நடைபெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us