/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பாலத்தில் நிறுத்தப்படும் பஸ்கள் காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பாலத்தில் நிறுத்தப்படும் பஸ்கள்
காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பாலத்தில் நிறுத்தப்படும் பஸ்கள்
காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பாலத்தில் நிறுத்தப்படும் பஸ்கள்
காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் பாலத்தில் நிறுத்தப்படும் பஸ்கள்
ADDED : மே 18, 2025 11:26 PM

காரைக்குடி : காரைக்குடியின் நுழைவாயிலான பழைய பஸ் ஸ்டாண்ட் பாலத்தில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, திருவாடனை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. புதுவயல், கானாடுகாத்தான், குன்றக்குடி, கல்லல், அமராவதிபுதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் 20க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
காரைக்குடியில் நுழைவாயிலாக கோவிலூர் சாலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி உள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி நடந்து வருவதால் பஸ்கள் வெளியில் நின்றபடி சென்று வருகிறது.
இதனால் அப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்நிலையில் காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பாலத்தில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.