ADDED : செப் 01, 2025 02:19 AM
சிவகங்கை:சிவகங்கை அருகே நாலுகோட்டை அதிகுந்த வரத அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா மற்றும் திருப்புத்துார் அருகே தென்மாபட்டியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
நாலுகோட்டை நடந்த போட்டியில் பெரிய, சிறிய மாடு பிரிவில் 29 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவுக்கு 7, சிறிய மாடு பிரிவுக்கு 5 கி.மீ., துார எல்லை நிர்ணயித்து நடத்தினர். இதில் முதல் 4 இடங்களை பிடித்த வண்டிகளின் உரிமையாளர், சாரதிக்கு பரிசுகள் வழங்கினர்.
* தென்மாபட்டு: திருமயம் -- மானாமதுரை ரோட்டில் பந்தயம் நடந்தது. முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி ஆகியோர் துவக்கி வைத்தனர். பெரிய மாட்டு பிரிவில் 7 கி.மீ., துாரத்திற்கு 9 ஜோடிகள், சிறிய மாடுபிிரிவில் 5 கி.மீ., துாரத்திற்கு 13 வண்டிகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் முதலிடம் நகரம்பட்டி கண்ணதாசன், 2 ம் இடம் அரசர்குளம் சிவந்தியப்பன், 3 ம் இடம் சுண்ணாம்பிருப்பு கண்ணன், 4 ம் இடம் தென்மாபட்டு பெரியய்யா ஆகியோரின் வண்டிகள் பெற்றன. சிறிய மாட்டு பிரிவில் முதலிடம் தென்மாபட்டு கவின், 2 ம் இடம் புது சுக்காம்பட்டி அதிபன், 3ம் இடம் பாகனேரி அகிலன், 4 ம் இடம் தென்மாப்பட்டு முத்துக்குமார் ஆகியோரின் வண்டிகள் பெற்றன.
/