ADDED : ஜூன் 06, 2025 02:41 AM
நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே இளங்குடியில் பூரண புஷ்கலா சமேத பகச்சால மூர்த்தி அய்யனார் கோயில்,கைலாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இளங்குடி காரைக்குடி ரோட்டில் இரு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. பெரிய மாடு பிரிவில் 10 வண்டிகளும், சின்னமாடு பிரிவில்23 வண்டிகளும் பங்கேற்றன. போட்டிகளில் வென்ற மாட்டு வண்டி உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனுமதியின்றி போட்டி நடந்தததால் நாச்சியாபுரம் போலீசார் ஏற்பாட்டாளர் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.