/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உடைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர்: பள்ளி மாணவர்கள் அவதி உடைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர்: பள்ளி மாணவர்கள் அவதி
உடைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர்: பள்ளி மாணவர்கள் அவதி
உடைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர்: பள்ளி மாணவர்கள் அவதி
உடைக்கப்பட்ட காம்பவுண்ட் சுவர்: பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : செப் 02, 2025 05:29 AM

எஸ்.புதுார் : எஸ்.புதுார் அருகே உடைக்கப்பட்ட பள்ளி காம்பவுண்ட் சுவர் மீண்டும் கட்டப்படாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
செட்டிகுறிச்சி அரசு துவக்கப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 2 ஆண்டு களுக்கு முன்பு போர்வெல் அமைப்பதற்காக லாரி செல்ல முன்புற காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டது.அதற்குப் பிறகு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இப்பள்ளி மலைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள நிலையில் அடிக்கடி பாம்பு உள்ளே நுழைந்து விடுகின்றன. மாடுகளும் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை அச்சுறுத்துகின்றன. ஆசிரியர்கள் தற்காலிகமாக கம்பி வேலியை கட்டி வைத்துள்ளனர்.
பள்ளியின் மற்றொரு பக்க சுற்றுச்சுவரும் சில நாட்களுக்கு முன்பு லாரி மோதி உடைந்துவிட்டது. மேலும் மழைக்காலங்களில் பள்ளி முன் தண்ணீர் குளம் போல் தேங்கி மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பான சுவரை உடனடியாக கட்டித் தர பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.