ADDED : ஜூன் 25, 2025 03:18 AM
திருப்புவனம் : திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருடு போன சம்பவத்தில் இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
முதுகுளத்துாரைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் வாகனச் சோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக திருப்புவனம் போலீசார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மாயமானது. போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் திருப்புவனம் நாடார் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், அங்காடிமங்கலம் 17 வயது சிறுவன் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.