ADDED : மே 30, 2025 03:22 AM
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோவிலுாரைச் சேர்ந்தவர் ராணி 50.
இவரது மகள் சந்திரா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பேரனை 6, தனது வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார் ராணி.
நேற்று முன்தினம் கோவிலுார் பெரியகண்மாயில் குளிக்க சென்ற போது, சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.