/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி அருங்காட்சியகத்தில் புத்தகங்கள் விற்பனை கீழடி அருங்காட்சியகத்தில் புத்தகங்கள் விற்பனை
கீழடி அருங்காட்சியகத்தில் புத்தகங்கள் விற்பனை
கீழடி அருங்காட்சியகத்தில் புத்தகங்கள் விற்பனை
கீழடி அருங்காட்சியகத்தில் புத்தகங்கள் விற்பனை
ADDED : ஜன 08, 2025 06:41 AM

கீழடி : கீழடி அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறை சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு 2023, மார்ச் 5ம் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினசரி இரண்டாயிரம் பேர் வரை வந்த வண்ணம் உள்ளனர். அருங்காட்சியகம் வரும் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் அகழாய்வு, பாரம்பரிய கட்டடங்கள், சுற்றுலா தளங்கள், தமிழர்களின் வரலாறு, வாழ்வியல் உள்ளிட்டவைகளை அறியும் பொருட்டு பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.